வாஜ்பாயின் அஸ்தி நாடு முழுவதும் உள்ள ஆறுகளில் கரைப்பு

Webdunia
ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2018 (11:57 IST)
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி நாடு முழுவதும் உள்ள முக்கிய ஆறுகளில் கரைக்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக்குறைவால் கடந்த 16-ந் தேதி மாலை மரணமடைந்தார். ஸ்மிருதி ஸ்தலம் பகுதியில் இறுதி சடங்குகளுக்கு பின் 21 குண்டுகள் முழங்க வாஜ்பாயின் உடல் பசுஞ்சான வரட்டிகள், சந்தனக்கட்டைகளை கொண்டு அவரின் உடல் எரியூட்டப்பட்டது.
 
இந்நிலையில் அவரது அஸ்தி, கலசம் லக்னோ நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
ஹரித்வார் நகரில் உள்ள கங்கை ஆற்றங்கரையில் அவரது ஈமச்சடங்குகள் நாளை நடைபெறுகிறது.கங்கை நதியின் பிறப்பிடமான ஹர் கி பவுரி காட் என்னும் இடத்தில் ஈமச்சடங்குகளுக்கு பின்னர் வாஜ்பாயின் அஸ்தி கங்கை நீரில் கரைக்கப்படுகிறது. மேலும் நாடெங்கும் உள்ள பல்வேறு நதிகளில் வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்படுகிறது.
 
நாளை சென்னைக்கு கொண்டு வரப்படும் வாஜ்பாயின் அஸ்தி மக்களின் அஞ்சலிக்கு பின்னர் கன்னியாகுமரி கடலில் கரைக்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்