தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தினந்தோறும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய அரசின் சார்பில் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன என்பதும் அந்த தடுப்பூசிகளை மாநில அரசுகள் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பி பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்தியாவில் இதுவரை மூன்று தடுப்பூசிகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மூன்று தடுப்பூசிகளில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த நிலையில் தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதுவரை 50 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை செய்து உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மீதம் உள்ள அனைவருக்கும் இந்த ஆண்டுக்குள் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது