5 ரூபாயால் வந்த அல்ப சண்டை; ரயிலிலிருந்து வீசப்பட்ட இளைஞர்! – உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (13:22 IST)
உத்தர பிரதேசத்தில் ரயில் ஊழியருடன் 5 ரூபாய்க்காக வாக்குவாதம் செய்த இளைஞர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த ரவி யாதவ் என்ற இளைஞர் தனது சகோதரியுடன் கடந்த சனிக்கிழமை ரப்திசாகர் விரைவு வண்டியில் பயணம் செய்துள்ளார். அப்போது ரயில் கேண்டீனில் பணிபுரியும் ஊழியர் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்துள்ளார்.

அவரிடம் தண்ணீர் பாட்டில் வாங்கிய ரவி யாதவ் ரூ.15 கொடுத்துள்ளார். ஆனால் ஊழியர் ரூ.20 தர வேண்டுமென கேட்டுள்ளார். பாட்டிலில் விலை ரூ.15 என்று குறிப்பிட்டுள்ளதாக ரவி யாதவ் அந்த ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ரவி யாதவ் இறங்க வேண்டிய லலித்பூர் ஸ்டாப்பிங் வந்தபோது அங்கே இறங்கவிடாமல் அந்த ஊழியரும் அவருடைய கூட்டாளிகளும் ரவி யாதவ்வை தடுத்துள்ளனர்.

பின்னர் ரயிலில் வைத்து ரவி யாதவ்வை தாக்கியதுடன் ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ரவி யாதவ் ஜான்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சகோதரி அளித்த புகாரின் பேரில் வன்முறையில் ஈடுபட்ட ரயில் ஊழியர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்