உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தல்… பாஜகவுக்கு பெரும் பின்னடைவு!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (11:43 IST)
உத்தர பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் நான்கு கட்டங்களாக நடந்த பஞ்சாயத்து தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் ஆளும் கட்சியான பாஜக கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது. மொத்தமுள்ள 3,050 கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர்களில் பாஜகவிற்கு 768 தான் கிடைத்துள்ளது. மற்றக் கட்சிகளான சமாஜ்வாதி 759 இடங்களயும் , பகுஜன் சமாஜ் கட்சி  319, இடங்களையும் காங்கிரஸ் 125 இடங்களையும் , ராஷ்டிரிய லோக் தளம் 69 இடங்களையும் கைப்பற்ற சுயேச்சைகளுக்கு 1,071 இடங்கள் கிடைத்துள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்