முகக்கவசம் அணியாவிட்டால் 10,000 ரூபாய் வரை அபராதம்: எந்த மாநிலத்தில்?

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (16:11 IST)
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதன் காரணமாக முழுவதும் வைரஸை கட்டுப்படுத்த அனைத்து பொதுமக்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. முகக் கவசம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம் விதிப்பதாக தமிழகம் உள்பட பல்வேறு மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி உத்தரபிரதேச மாநிலத்தில் பொது இடங்களிலோ முகக்கவசம் அணியாமல் வந்தால் முதல் முறை ஆயிரம் ரூபாயும் இரண்டாவது முறை பத்தாயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கும் வகையில் விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் ஒவ்வொரு ஞாயிறன்றும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் விதிகளை கடுமையாக்க முகக்கவசம் அணியாமல் வருபவருக்கு 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்