ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்!

Mahendran
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (10:09 IST)
ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதியில் வாழும் மக்கள் அச்சத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை 6.45 மணிக்கு அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ரிக்டர் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 4.9, 4.8  என பதிவாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பாராமுலா என்ற பகுதியில்தான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் பூமிக்கு 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை உயிர் சேதம், பொருட்சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மக்கள் அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்து இருப்பதாகவும் இயல்பு நிலை திரும்ப இன்னும் சில மணி நேரங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது. இரண்டு முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் இன்னும் சில நிலநடுக்கம் ஏற்பட்டு விடுமோ என்ற பயம் மக்கள் மத்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

ALSO READ: ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் சரிந்த தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்