மாற்று கட்சிக்கு வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம்

Webdunia
வியாழன், 9 ஜூன் 2016 (19:29 IST)
சட்டசபை தேர்தலில் மாற்று கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த இரண்டு எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.


 

 
உத்திரகாண்ட் மாநிலத்தில் சட்டசபையில் கடந்த 10ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதில் மாற்று கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த இரண்டு எம்.எல்.ஏ.க்களை கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் சாபாநாயகர் பதவி நீக்கம் செய்தார்.
 
பாஜக கட்சியைச் சேர்ந்த பிம்லால் ஆர்யா மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேகா ஆர்யா ஆகியோர் வேறு கட்சிக்கு வாக்களித்தது தெரியவந்தது. இதனால் சபாநாயகர் கோவிந்த் சிங் குஞ்வால் இந்த இரு எம்.எல்.ஏ.க்களையும் பதவியில் இருந்து நீக்கம் செய்தார்.
 
இதற்கு முன் மார்ச் மாதம், சபாநாயகர் கோவிந்த் சிங் 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை முதலமைச்சருக்கு எதிராக செயல்பட்டதாக கூறி பதவி நீக்கம் செய்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனால் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில் நடைப்பெற்றது. அதனால் இந்த இரண்டு எம்.எல்.ஏ.க்களும் கட்சி மாறி வாக்களித்தது தெரிய வந்தது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்