நவம்பர் 11 நள்ளிரவு வரை சுங்கச்சாவடி கட்டணம் ரத்து

Webdunia
புதன், 9 நவம்பர் 2016 (17:31 IST)
நவம்பர் 11 நள்ளிரவு வரை அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடியை கடிந்து செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் இல்லை என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.


 

 
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பணத்தை மாற்றவும் முடியாமல், சில்லைரை தட்டுபாடும் எற்பட்டு அனைவரும் தவித்து வருகின்றனர்.
 
இதனால் இன்று இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த முடியாமலும், சில்லரை கொடுக்க முடியாமலும் ஊழியர்கள் மற்றும் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். 
 
இந்நிலையில் நவம்பர் 11ஆம் தேதி நள்ளிரவு வரை சுங்கச்சாவடி கட்டணம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஜ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்