கடந்த வாரம் முழுவதும் இந்திய பங்குச் சந்தை மிகவும் மோசமாக சரிந்தது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 557 புள்ளிகள் ஆரம்பத்திலேயே வீழ்ச்சி அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இன்று காலை 10 மணி அளவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 557 புள்ளிகள் குறைந்து 58487 என வர்த்தகமாகி வந்தது
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 172 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 435 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய பங்குச் சந்தையில் உலோகத் தொழில் நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு விலைகள் 5 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.