அதிகரிக்கும் குழந்தைகள் கடத்தல்; திருப்பதி தேவஸ்தானத்தில் சிசிடிவி கேமரா பொருத்தம்

Webdunia
ஞாயிறு, 7 ஜனவரி 2018 (13:24 IST)
குழந்தைகள் கடத்தல் அதிகளவில் நடைபெற்று வருவதை தொடர்ந்து 400 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

 
ஆந்திரா மாநிலம் திருமலை ஏழுமலையானை தனசரி தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குழந்தைகள் கடத்தலை தடுக்கும் வகையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுமார் நான்கரை கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 400 அதி நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
 
திருட்டும், குழந்தைகள் கடத்தலும் கடந்த சில மாதங்களாக திருப்பதி கோயிலில் அதிகரித்து வரும் நிலையில் அவற்றை ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் காவல்துறையினருக்கு உதவியாய் அமைந்தது.
 
இந்நிலையில் சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்னும் ஆறு மாத காலத்திற்குள் கோயில் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்