திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும் நிலையில் இன்று கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் கோலாகலமாக ஆரம்பமாகியது.
இந்த கொடியேற்றத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனார். செப்டம்பர் 26ஆம் தேதி முதல் 9 நாட்கள் இந்த வருடாந்திர பிரமோற்சவ விழா நடைபெறும் என திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளார்
இந்த பிரம்மோற்சவ விழாவின்போது பலவிதமான வாகனங்களில் உற்சவமூர்த்தி தாயார்களுடன் எழுந்தருள்வார் என்பதும் பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆந்திர மாநில அரசு சார்பில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்