உன் பருப்பு இங்க வேகாது... மன்றாடும் டிக்டாக்கை மதிக்காத மத்திய அரசு!

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (10:36 IST)
மத்திய அரசு டிக்டாக் மீதான தடையை பின்வாங்க வைக்க டிக்டாக் நிறுவனம் கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது.
 
இந்திய, சீன எல்லையான கால்வான் என்ற பகுதியில் சமீபத்தில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஏற்கெனவே சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்படலாம் என்று மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளிவந்தது.  
 
இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் உத்தரவின்படி டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், கேம் ஸ்கேனர், க்ளீன் மாஸ்டர், வீ-சாட் உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை என மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. 
 
இதனோடு தற்போது சமீபத்தில் மேலும் சில ஆப்புகளை பாதுகாப்பு காரணம் காட்டி தடை செய்துள்ளது மத்திய அரசு. ஆனால், இந்த தடையை பின்வாங்க வைக்க டிக்டாக் நிறுவனம் கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. தனது நிறுவன தலைமையகத்தை மாற்றவும் ஆலோசித்து வருகிறது. 
 
இந்நிலையில் டிக்டாக் இந்தியாவின் தலைவர் நிகில் காந்தி, மத்திய அரசிடம் எங்களைப் பற்றிய தகவல்களைக் கொடுக்கவும், அரசுக்கு பாதுகாப்பு குறித்த தகவல்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். 
 
அதோடு, எங்கள் செயல்பாடுகள் எப்போதும், பயன்பாட்டாளர்களின் ப்ரைவசி மற்றும் பாதுகாப்பு உட்பட சட்டங்களுடன் இணங்கி நடக்கும். டிக் டாக் நிறுவனம் இந்திய பயன்பாட்டாளர்களின் தகவல்களை எந்தவொரு வெளிநாட்டு அரசுடனும் பகிர்ந்து கொள்ளவில்லை, எதிர்காலத்தில் கேட்டாலும் அந்த செயலை செய்யாது என்றும் உறுதியளித்துள்ளார். 
 
ஆனால் மத்திய அரசு இதனை எந்த அளவிற்கு பரிசிலிக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்