தேர்வு எழுதாமலே 30 மாணவர்கள் பாஸ் : பீகார் பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி

வியாழன், 16 ஜூன் 2016 (17:10 IST)
தேர்வே எழுதாத 30 மாணவர்களை பிகாரின் முசோஃபர்பூரில் உள்ள பீம்ராம் அம்பேத்கார் பல்கழைக்கழகம் தேர்ச்சி பெறச் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சமீபகாலமாக, அந்த பல்கழைக்கழக மாணவர்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்ததை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு சென்று சோதானை நடத்தினர். 
 
அப்போது இளங்கலை பிரிவில்,  விடைத்தாளில் ஒரு வார்த்தை கூட எழுதாத 30 மாணவர்களை பாஸ் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. மறுமதிப்பீட்டுக்கு சில மாணவர்கள் விண்ணப்பித்த போது, அவர்களின் விடைத்தாள்களை எடுத்து பார்த்தபோதுதான், 30 மாணவர்களின் விடைத்தாள்களில் ஒரு வார்த்தை கூட எழுதப்படாமல் இருப்பதும், அவர்களுக்கு பாஸ் போட்டதோடு, தேர்ச்சி மதிப்பெண்கள் சான்றிதழும் வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
 
விசாரணையில், அந்த 30 மாணவர்களும் ஒரே கல்லூரியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்