கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மூணாறு, இடுக்கி, கோழிக்கோடு உள்ளிட்ட இடங்களில் மண்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கேரள மாநிலம் எர்ணாகுலத்தில் உள்ள கும்பலங்கி என்ற இடத்தில் வசிக்கு மேரி செபஸ்டியன் எனும் பெண் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய நினைத்தார்.
எனவே, தனது வீட்டில் தயாரித்த உணவுப்பொட்டலங்களுடன் பல்வேறு இடங்களில் இருந்து பெறப்பட்ட பொட்டலங்களை பாதிகப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று கொடுத்து, அவர்களுக்கு தெரியாமல் உணவுப்பொட்டலத்தில் ரூ. 100 பணம் வைத்துக் கொடுத்துள்ளார். மேரி செபாஸ்டியன் செயலுக்கு பலரும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர்.