ஆசையாக சிறுமி வளர்த்ததை வெட்டி எறிந்த அதிகாரி...சிறுமிக்கு ’அது ’ திரும்ப கிடைத்தா ? வைரல் வீடியோ!

Webdunia
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (21:18 IST)
மணிப்பூர் மாநிலத்தில் கக்சிங் மாவட்டம்  அருகேயுள்ள ஹியாங்லாம் மக்கா லேக்காய் என்ற பகுதி உள்ளது.  இங்குள்ள பள்ளியில் படிக்கும் 9 வயது சிறுமியான வாலென்டினா எலங்க்பாம்,  தனது வீட்டுக்கு அருகில் சுமார்  4 வருடங்களுக்கு முன்னர் குல்மோகர் ரக மரங்களை ஆசை ஆசையாய வளர்க்க ஆசைப்பட்டார்.  இதையடுத்து அதில் இரண்டு 2 மரங்களை நட்டுவைத்து வளர்த்து வந்தார்.
இந்நிலையில் வாலென்டினா எலங்க்பாம்,   தற்போது 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த  4 மாதங்களுக்கு முன்னர் மணிப்பூர் அரசு ஒரு உத்தரவிட்டது . அதில்  ஏரிக்கரை பகுதியில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மரங்களை வெட்டுமாறு கூறியது. அந்த சமயத்தில்தான் சிறுமி தான் தண்ணீர் ஊற்றி நிழல தரும் என நினைத்து  வளர்த்த 2 மரங்களும் அணுவணுவாக வெட்டப்பட்டன.
 
இந்த சம்பவத்தால் சிறுமி பெரிதும் வருந்தினார். தான் வளர்ந்த மரம் வெட்டப்பட்டதால் மிகவும் வேதனையடைந்த அவரது அழுகுரல் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியானது.
 
இந்த வீடியோவை மணிப்பூர் மாநில முதலமைச்சரான பிரன் சிங் மற்றும் வனத் துறை அமைச்சரான ஷியாம் குமார் சிங் ஆகிய முக்கியப் பதவிகளி வகிப்போர் பார்த்து பரிதாபம் அடைந்துள்ளதாகத் தெரிகிறது. 
 
இந்நிலையில் மரத்தின்  மீது சிறுமிக்கு உள்ள ஆர்வத்தை  வளர்க்கும் பொருட்டும், அவரது முயற்சியை பாராட்டும் பொருட்டும்  ஞாயிற்றுக்கிழமையன்று 20 மரக்கன்றுகளை நட்டுள்ளனர். 
இத்தனை  சிறிய வயதில் இயற்கை மீது பேரார்வம் கொண்டுள்ள சிறுமி வாலென்டினா எலங்க்பாமாவுக்கு அப்பகுதி எம்.எல்.ஏ பரிசு வழங்கி பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்