18 வருடங்களுக்குப் பிறகு பிறந்த குழந்தைகளை பார்க்காமலேயே இறந்த தாய்

Webdunia
செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (11:21 IST)
கேரளாவில் திருமணமாகி 18 வருடங்களுக்குப் பிறகு பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை பார்க்காமலேயே தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பெண்ணுக்குத் திருமணமானவுடன் குழந்தை பிறக்க வேண்டும். அதுதான் அவளுக்குத் தனிப்பட்ட மகிழ்ச்சியையும், இருவீட்டாரிடமும் நெருக்கத்தையும் உண்டாக்கும். ஆனால் அப்படி ஆகாவிடில், அந்த பெண் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். பார்ப்பவர்கள் எல்லாம் அந்த பெண்ணையே குறை கூறுவார்களே தவிர, அந்த ஆண் மீது எந்த பலி சொல்லும் வராது. 
 
இந்நிலையில் கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் சசிபாலன். அவரது மனைவி ஷீபா. இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. குழந்தை வேண்டி தம்பதியினர் ஏறாத மருத்துவமனையும் இல்லை, ஏறாத கோவிலும் இல்லை.
 
இதனையடுத்து ஷீபா கர்ப்பம் தரித்தார். நேற்று முன்தினம் ஷீபாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஷீபா பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுகபிரசவத்திற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்த பின்னர் ஷீபாவுக்கு ஆபரேசன் செய்யப்பட்டது. ஆபரேசன் மூலம் இரட்டை பெண் குழந்தைகளை பிறந்தது. குடும்பத்தினர் சந்தோஷத்தில் ஆழ்ந்தனர். 
 
ஆனால் அவர்களின் சந்தோஷம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அதிக ரத்தப்போக்கால் ஷீலா அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். குழந்தைகளை பார்க்காமலேயே ஷீபாவின் உயிர் பிரிந்தது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்