ஜாமினில் வந்த எம்.எல்.ஏ மறுநாளே மீண்டும் கைது: தெலுங்கானாவில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (20:51 IST)
தெலங்கானா மாநிலத்தில் ஜாமினில் வெளிவந்த எம்எல்ஏ மறுநாளேமீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இஸ்லாமிய மதத்தை கடுமையாக விமர்சித்ததாக தெலுங்கானா எம்எல்ஏ டி ராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் நீதிமன்ற உத்தரவுப்படி ர் ஜாமீனில் வெளிவந்த நிலையில் மறுநாளே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் 
 
நீதிமன்ற தடையை மீறி வீடியோ ஒன்றை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாகவும் அதனால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது
 
தெலுங்கானா  எம்எல்ஏ ஜாமினில் வெளிவந்த மறுநாளே மீண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்