சுற்றுலா தளமாக மாறும் மோடி டீ விற்ற கடை

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2017 (15:12 IST)
பிரதமர் நரேந்திர மோடி சிறுவயதில் டீ விற்ற கடையை சுற்றுலா தளமாக மாற்ற சுற்றுலாத்துறை அமைச்சகம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.


 

 
குஜராத் மாநிலம் மேக்சானா மாவட்டம் வாத்நகர் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த ஊர். வாத்நகர் ரயில் நிலையத்தில் உள்ள டீக்கடை ஒன்றில் மோடி சிறுவயதில் வேலை செய்துள்ளார். இதை அவரே தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியுள்ளார். 
 
தற்போது அந்த டீக்கடையை நவீன முறையில் மாற்றி சுற்றுலா தளமாக அமைக்க மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மோடி பிறந்த ஊர் என்பதற்காக இதை செய்யவில்லை வாத்நகர் ஒரு முக்கிய சுற்றுலா மையம், அங்கு புகழ்பெற்ற சர்மிஸ்தா ஏரியும் அமைந்துள்ளது என அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். 
 
மேலும் உலக சுற்றுலா பயணிக்களுக்கான வரைப்படத்தில் வாத்நகரை இடம்பெற செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அடுத்த கட்டுரையில்