வெளிநாடுகளில் இந்தியர்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் 20% வரி: மத்திய அரசு அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 18 மே 2023 (10:22 IST)
இந்தியர்களின் கிரெடிட் கார்டுகளை வெளிநாட்டில் பயன்படுத்தினால் 20% வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது கிரெடிட் கார்டு பயனாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை இந்தியாவில் உள்ள இந்தியர்கள் வெளிநாடு செல்லும் போது இந்தியாவில் உள்ள வங்கிகளில் வாங்கிய கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் 5% வரி மட்டும் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த வரி 20 சதவீதம்  என அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது

அதிகப்படுத்தப்படும் வரி விகிதம் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் கிரெடிட் கார்டு பயனாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கிரெடிட் கார்டு பயனாளிகள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில் தற்போது 20% வரி விதிப்பு என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்