சன் நெட்வொர்க் நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கேரள ஊழியர்கள்

Webdunia
செவ்வாய், 30 மே 2017 (22:24 IST)
தமிழகத்தில் இருக்கும் சன் டிவியை போலவே கேரளாவில் சூர்யா என்ற பெயரில் சன் நெட்வொர்க் நிறுவனத்திற்கு ஐந்து சேனல்கள் ஓடுகிறது. சூர்யா டிவி, சூர்யா மியூசிக், சூர்யா மூவீஸ், சூர்யா காமெடி, கொச்சு டிவி என இந்த ஐந்து டிவிக்களின் ஊழியர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



 


இந்த சேனல்களில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்களுக்கு ரூ.10000 மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டு வருகிறாதாம். கடந்த 18 ஆண்டுகளில் யாருக்குமே சம்பள உயர்வு இல்லையாம். எனவே கலாநிதி மாறன் சம்பளத்தை உயர்த்தும் வரை போராட்டம் தொடரும் என்று சூர்யா டிவி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டில் மட்டும் கலாநிதி மாறன் மற்றும் காவேரி மாறன் ஆகியோர் வருட சம்பளமாக தலா ரூ.61 கோடி எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போராட்டத்தில் 164 ஆண் தொழிலாளர்களும், 14 பெண் தொழிலாளர்களும் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்தியாவிலேயே மிக அதிகம் லாபம் பெறும் நிறுவனங்களில் ஒன்றை நடத்தி வரும் கலாநிதி மாறன் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்காவிட்டாலும், உரிய சம்பளத்தையாவது கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.
அடுத்த கட்டுரையில்