உச்ச நீதிமன்றத்தின் இணையதளம் ஹேக்கர்களால் முடக்கம்...

Webdunia
வியாழன், 19 ஏப்ரல் 2018 (14:13 IST)
இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளம், ஹேக்கர்ஸ்களால் முடக்கம் செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
உச்ச நீதிமன்றத்திற்கென பிரத்யோக இணைய தளம் செயல்பட்டு வருகிறது. அதில், நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகள் குறித்த விபரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், இன்று காலை நீதிபதி லோயாவின் மரணம் குறித்த விசாரணையில் தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில், உச்ச நீதிமன்றத்தின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டது. அதன்  முகப்பு பக்கத்தில் ஹைடெக் பிரேசில் ஹேக் டீம் என குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, பிரேசில் நாட்டை சேர்ந்த ஹேக்கர்ஸ் இதை செய்துள்ளனர் எனத் தெரிகிறது.
 
அதன் பின் சற்று நேரத்தில் இணையதளம் முற்றிலும் முடங்கிப்போனது. இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அதை சரி செய்யும் முயற்சியில் கணிப்பொறி வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்