வராக்கடனா? வஜாக்கடனா? கேள்வி எழுப்பிய சு வெங்கடேசன் எம்பிக்கு நெட்டிசன்கள் பதிலடி..!

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2023 (13:54 IST)
வராக்கடனா? வஜாக்கடனா? என கேள்வி எழுப்பிய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு வெங்கடேசனுக்கு  நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளனர். எம்பி சு வெங்கடேசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

‘வராக்கடன் என்றால் வசூலாகும் கடன்தான் என்று எப்போதும் நிதியமைச்சர் விளக்கம் தருவார். ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் வராக் கடன் ரூ 10.42 லட்சம் கோடி. இதே காலத்தில் வசூலிக்கப்பட்ட வராக்கடன் ரூ 1.61 லட்சம் கோடி மட்டுமே. மீதம் 8.79 லட்சம் கோடி என்ன ஆனது? பதில் சொல்லுங்கள் நிர்மலா சீதாராமன் அவர்களே.. வராக்கடனா ? வஜாக்கடனா? என பதிவு செய்திருந்தார்,.

 இந்த கேள்விக்கு பதில் அளித்த நெட்டிசன்கள், ‘நீங்கள் கூறிய வாரா கடன் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்டது என்றும் எனவே நீங்கள் கேட்க வேண்டியது காங்கிரஸ் காலத்தில் ஆட்சியில் இருந்தவர்களை தான் என்று நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்

இந்த கேள்விகளுக்கு இதுவரை வெங்கடேசன் எம்பி பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்