டோலிவுட், கோலிவுட் பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி அதன்பின்னர் சச்சின் உள்பட பலர் மீது குற்றஞ்சாட்டினார். தற்போது அவரது கவனம் அரசியல்வாதிகள் பக்கம் திரும்பியுள்ளது.
தெலுங்கானா முதல்வர் அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். எம்.எல்.ஏ ஜீவன்ரெட்டி அரசியல்வாதியாக இருக்க தகுதியற்றவர். அவர் என் முன்னாலேயே போதை பொருளை உட்கொண்டுள்ளார். பல பிரபலங்களுக்கு அவர் பெண்களை சப்ளை செய்யும் புரோக்கராக இருந்துள்ளார். அவர் மீது சந்திரசேகராவ் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமால் என்னை பழிவாங்கும் விதத்தில் என் மீது நடவடிக்கை எடுத்தால் என்னை எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெரியும். நான் வாய் திறந்தால் அவ்வளவுதான். பலபேருடைய முகத்திரை கிழியும் என்று மிரட்டும் வகையில் நடிகை ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.