விஜய் மல்லையாவின் 5600 கோடி சொத்துகள்… வங்கிகளுக்கு அளிக்க உத்தரவு!

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (08:19 IST)
வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவின் 5600 கோடிகளுக்கு மேலான சொத்துகளை வங்கிகளுக்கு அளிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் உள்ள வங்கிகளில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்து வெளிநாடு தப்பியவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. இவரை லண்டன் போலீஸார் கைது செய்த நிலையில் இவர் மீதான வழக்கு இலண்டன் மற்றும் இந்தியா இரு நாடுகளிலும் நடந்து வருகிறது. இந்நிலையில் அவரை இந்தியாவுக்கு அழைத்து வர அமலாக்கத்துறை முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில் 5600 கோடி மதிப்பிலான அவரின் சொத்துகள் முன்னதாக முடக்கப்பட்ட நிலையில் அவற்றை வங்கிகளிடம் அளிக்கலாம் என சிறப்பு நீதிமன்றம் இப்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்