மாநிலங்களவைக்கு முதல் முறையாக சோனியா காந்தி தேர்வு..! சட்டமன்ற செயலகம் முறைப்படி அறிவிப்பு..!

Senthil Velan
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (16:38 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 
வரும்  27-ஆம் தேதி 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் நடைபெற உள்ளது.
 
காங்கிரஸ் முதல் தலைவர் சோனியா காந்தி,  ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதை அடுத்து கடந்த 14 ஆம் தேதி ஜெய்ப்பூரில் தனது வேட்புமனுவை சோனியா காந்தி தாக்கல் செய்தார்.
 
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை  ராஜஸ்தான் சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
 
ஐந்து முறை மக்களவை உறுப்பினராக பணியாற்றிய சோனியா காந்தி, முதல் முறையாக மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ALSO READ: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா கோலாகலம்..! பக்தர்களுக்கு அருள் பாலித்த உற்சவர்..!!
 
கடந்த 1964 ஆக. முதல் 1967 பிப். வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. அதன் பின்னர் காந்தி குடும்பத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக நுழைய இருப்பவர் சோனியா காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்