உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான சோசியல் மீடியா செயலிகள் பயன்படுத்தப்பட்டாலும் Whatsapp, Facebook, Instagram, Youtube போன்ற செயலிகள் பயன்பாட்டில் முன்னிலையில் உள்ளன.
முதன்முதலாக சோசியல் மீடியா தினம் ஜூன் 30, 2010ல் தான் கொண்டாடப்பட்டது. வளர்ந்து வரும் சோசியல் மீடியா யுகம் மற்றும் மக்களின் சோசியல் மீடியா தகவல் தொடர்பு பயன்பாடுகளை உணர்த்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
2002ல் Freindster என்ற சோசியல் மீடியா பிரபலமாக இருந்தது. தொழில்ரீதியான சோசியல் ப்ளாட்பார்மான Linkedin தளம் 2003ல் உருவாக்கப்பட்டது. பிரபலமான பேஸ்புக் 2004ல் உருவாக்கப்பட்டது. ஆனால் 2006 வரை MySpace என்ற சோசியல் மீடியாதான் உலக அளவில் அதிக பயன்பாட்டில் இருந்தது. 2005ம் ஆண்டில்தான் வீடியோ பகிர்வதற்காகவே ஸ்பெஷல் சோசியல் மீடியாவாக யூட்யூப் அறிமுகமானது.
தற்போது டிக்டாக், இன்ஸ்டா ரீல்ஸ் என வீடியோ சார்ந்த ப்ளாட்பார்ம்கள் அதிகரித்துவிட்டன. எளிதில் யாரும் யாரையும் தொடர்பு கொள்ளவும், நட்பு கொள்ளவும் சோசியல் மீடியா உதவியுள்ளது. அதேசமயம் சோசியல் மீடியாவில் சில ஆபத்துகளும் உள்ளன. அதனை உணர்ந்து பாதுகாப்பான முறையில் அனைவரும் சோசியல் மீடியாவை பயன்படுத்துவோம்.