அதிக செலவாகும் நகரங்கள் பட்டியல்: இந்தியாவில் முதலிடம் இந்த நகருக்குத்தான்!

வியாழன், 30 ஜூன் 2022 (11:10 IST)
உலகின் அதிக செலவாகும் நகரங்களின் பட்டியல் வெளியாக இருக்கும் நிலையில் இந்திய அளவில் முதல் இடத்தை மும்பையும்,  இரண்டாவது இடத்தை டெல்லியும் பிடித்துள்ளது 
 
உலகின் அதிக செலவாகும் நகரங்களின் பட்டியல் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த பட்டியலில் உலக அளவில் முதலிடத்தை ஹாங்காங் பிடித்துள்ளது 
 
இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை ஜூரிச் மற்றும் ஜெனிவா பிடித்துள்ளது என்பதும், இந்த இரு நகரங்களும் சுவிஸ் நாட்டில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்திய அளவில் அதிக செலவாகும் இடமாக மும்பை நகரம் இடம் பெற்று உள்ளது. இது உலகின் 127வது இடத்தைப் பெற்றுள்ளது .

மேலும் இந்தியாவில் அதிக செலவாகும் நகரங்களாக டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய நகரங்கள் இடம்பெற்று உள்ளது என்பதும் இந்த பட்டியலில் சென்னை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்