இந்தியாவிலும் புர்காவுக்குத் தடை – சிவசேனா கோரிக்கை !

Webdunia
புதன், 1 மே 2019 (21:02 IST)
இலங்கையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக பர்தா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதைப் போல இந்தியாவிலும் தடை விதிக்க வேண்டுமென சிவசேனா தனது கட்சி பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி  அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் நடந்தவெவ்வேறு பகுதிகளில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதலுக்கு இதுவரை 253 பேர் வரை உயிர் இழந்துள்ளனர் என்றும் மேலும் 500 பேருக்கும் மேற்பட்டோர்  காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பயங்கரவாதிகள் புர்காவைப் பயன்படுத்தி தங்கள் முகத்தை மறைத்துக்கொண்டு இலங்கையில் உலவுகிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் முகத்தை முழுதாக மூடி புர்கா அணிவது தடை இலங்கை அதிபரால் தடை செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள சிவசேனா கட்சியின் பத்திரிக்கையான சாம்னா ‘மத ரீதியான நடைமுறை தேசியப் பாதுகாப்புக்கு இடையூறாக இருக்குமேயானால் அதை தடை செய்வதே நல்லது. இந்த தடை அதிபர் மைத்ரிபால சிரிசேனாவின் தைரியத்தை வெளிப்படுத்துகிறது. இலங்கையைப் போல இந்தியாவிலும் இதுபோல நடவடிக்கையை பிரதமர் மேற்கொள்ள வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்