சிக்கிம் மாநில முதல்வரின் மனைவி பதவியேற்ற மறுநாளே தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருப்பது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலுடன் சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தல் நடந்த நிலையில் மாநிலத்தில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா என்ற கட்சி வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது என்பதும் முதல்வராக பிரேம்சிங் தமாங் என்பவர் பதவி ஏற்றார் என்பது தெரிந்தது.
இந்த நிலையில் சிக்கிம் மாநிலத்தில் போட்டியிட்ட முதல்வரின் மனைவி கிருஷ்ணகுமார் ராய் என்பவர் நேற்று எம்எல்ஏவாக பதவியேற்றார். இந்த நிலையில் அவர் திடீரென தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவரது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டுள்ளதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வரின் மனைவி எதற்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்பதால் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.