பிரபல கிரிக்கெட் வீரர் சித்து மனைவி எடுத்த அதிரடி முடிவு

Webdunia
புதன், 23 அக்டோபர் 2019 (07:36 IST)
பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். நவ்ஜோத்சிங் கடந்த ஜூன் மாதம் பஞ்சாப் அமைச்சரவையில் இருந்து விலகிய நிலையில் தற்போது அவரது மனைவி கட்சியில் இருந்தே விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் மாநில அமைச்சராக இருந்து வந்த நிலையில் திடீரென அவரது இலாகாவை அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங்கு மாற்றினார். இதனால் முதல்வருக்கும் சித்துவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் சித்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்வதாக பஞ்சாப் முதல்வரும் அறிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்தே விலகியுள்ளார். கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் சண்டிகரில் போட்டியிட சித்து மனைவி வாய்ப்பு கேட்டதாகவும் ஆனால் அவருக்கு சீட் கிடைக்காததால் அவர் அதிருப்தியில் இருந்ததாகவும் அதன் காரணமாக தற்போது அவர் கட்சியில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது
ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்திக்கு கடந்த ஜூன் மாதமே அனுப்பிவிட்டதாகவும் ஆனால் தற்போதுதான் இதுகுறித்த தகவல் ஊடகங்களுக்கு தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
தற்போது ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் இல்லை என்பதால் இவரது ராஜினாமாவை தற்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்றுக்கொண்டாரா? என்பது குறித்த தகவல் இல்லை

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்