வாக்கு எண்ணிக்கை நாளில் பங்குச்சந்தை சரிவு: விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் மனு!

Mahendran

சனி, 8 ஜூன் 2024 (09:08 IST)
வாக்கு எண்ணிக்கை நாளில் பங்குச்சந்தை பயங்கரமான சரிந்ததற்கு விசாரணை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தேர்தல் முடிவடைந்து எக்ஸிட் போல் வெளியானவுடன் பங்குச் சந்தை மிக பயங்கரமான உயர்ந்தது. ஆனால் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லை என்ற செய்தியை வெளியானவுடன் பங்குச்சந்தை படுமோசமாக சரிந்தது. 
 
இதனை அடுத்து மறுநாள் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி என்று செய்தி வெளியானவுடன் இறங்கி பங்கு சந்தை மீண்டும் உயர்ந்தது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளில் பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்ததற்கு சளி இருப்பதாகவும் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து மத்திய அரசு மற்றும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளது. 
 
இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்