தோல்வியில் இருந்து மீள முடியாத ராகுல் காந்தி..! பங்குச் சந்தை தொடர்பான குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி..!!

Senthil Velan

வியாழன், 6 ஜூன் 2024 (20:47 IST)
பங்குச் சந்தை தொடர்பான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை எனவும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து ராகுல் காந்தி இன்னும் வெளியே வரவில்லை எனவும் பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.  பங்குச் சந்தையில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளதாகவும், பங்குச் சந்தையில் ரூ.30 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது எனவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.  சிலர் பணம் சம்பாதிக்க பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உதவியுள்ளனர் என்று ராகுல் காந்தி பகிரங்கமாக கூறியிருந்தார்.
 
இந்த குற்றச்சாட்டுகளுகுப் பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மூத்த தலைவர் பியூஷ் கோயல் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து ராகுல் காந்தி இன்னும் வெளியே வரவில்லை என்று தெரிவித்தார். தற்போது, ​​சந்தை முதலீட்டாளர்களைத் தவறாக வழிநடத்தச் சதி செய்கிறார் என்றும் முதலீட்டாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ராகுல் காந்தி பேசியுள்ளார் என்றும் அவர் கூறினார்.  
 
பங்குச் சந்தை தொடர்பான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என தெரிவித்த பியூஷ் கோயல், மோடி அரசாங்கத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக நமது சந்தை மதிப்பு 5 டிரில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது என்று கூறினார். 

இன்றைய சூழலில் இந்தியாவின் பங்குச் சந்தை உலகின் முதல் 5 பொருளாதாரங்களின் சந்தை மூலதனத்தில் நுழைந்துள்ளது என்றும் மோடி அரசாங்கத்தின் கீழ் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் சந்தை மூலதனம் 4 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

ALSO READ: பாஜகவை வீழ்த்த அயல்நாட்டு சக்தி..! தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு..!

10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி  அரசு ஆட்சியில் இருந்த போது, ​​அப்போது இந்தியாவின் சந்தை மதிப்பு ரூ.67 லட்சம் கோடியாக இருந்தது என்றும் தற்போது சந்தை மதிப்பு ரூ. 415 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றும் பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்