பள்ளி மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு...அதிர்ச்சி சம்பவம்

Webdunia
சனி, 28 ஜனவரி 2023 (16:55 IST)
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி   மாணவி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உஷா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாணவி விரிந்தா திரிபாதி(16).

இவர், அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில்  11 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த புதன் கிழமை அன்று வழக்கம் போல் அவர் பள்ளிக்குச் சென்றார்.

குடியரசுத் தினவிழாவுக்கு ஒத்திகை நடந்த நிலையில், ஒத்திகை முடிந்தபின்  அவர் வகுப்பிற்குச் சென்றார்.

வகுப்பிற்குச் சென்றதும் அவர் மயங்கி விழுந்தார். ஆசிரியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாகக் கூறினார்.

மேலும், மாணவி குடியரசு தின விழா ஒத்திகை செய்தபின்னர், நொறுக்குத் தீனி சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்