நோயாளியின் உடலில் சாத்துக்குடி சாறு செலுத்திய விவகாரம்: விசாரணைக்கு உத்தரவு

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (20:52 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் டெங்கு நோயாளி ஒருவரின் உடலில் பிளாஸ்மா ஏற்றுவதற்குப் பதில் சாத்துக்குடி சாற்றை ஏற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வருகிறது.  இந்த மா நில தலை நகர் பிரயாக் ராஜில்  உள்ள குளோபல் என்ற மருத்துவமனையில் டெங்கு நோயாளி ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு ரத்த பிளேட்லெட்டுகள் குறைந்ததால் உடனடியாக ரத்த பிளாஸ்மாதேவைப்பட்டது. உள்ளூர் ரத்த வங்கியிடம் ரத்த பிளாஸ்மா கேட்டு வாங்கப்பட்டது.

அதை  நோயாளியின் உடலலில் ஏற்றப்பட்டது. ஆனால், ரத்த வங்கி ரத்த பிளாஸ்மாவுக்குப் பதிலாக சாத்துக்குடி சாறு இருந்ததால் நோயாளி உயிரிழந்தார்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறாது. இதற்கு நோயாளியின் உறவினர்களும், சமூக ஆர்வலர்களும்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், உபி துணை முதல்வர் பிரஸ்ஜேஷ், முதல் அலுவலகத்தின் உத்தரவின் பேரின் விசாரணை நடத்த ஒரு அதிகாரி தலைமையிலான குழுவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்