சபரிமலை கோயில் நடை திறக்கும் தேதி அறிவிப்பு!

திங்கள், 7 பிப்ரவரி 2022 (08:04 IST)
ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாட்கள் சபரிமலையில் நடை திறக்கப்படும் என்ற நிலையில் மாசி மாதத்திற்கான சபரிமலை கோயில் நடை திறப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. 
 
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை பிப்ரவரி 12ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக சபரிமலை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது 
 
சபரிமலை கோயில் திறக்கப்பட்ட உடன் தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக 2 தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் சபரிமலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்