தடுப்பூசி போட்டிருந்தால் டிக்கெட்டில் சலுகை! – இண்டிகோ அசத்தல் அறிவிப்பு!

வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (09:29 IST)
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக விமான சேவை குறைந்திருந்த நிலையில் டிக்கெட் விலையில் இண்டிகோ நிறுவனம் சலுகை அளித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக விமான சேவைகள் தொடர்ந்து பாதித்து வருவதால் விமான நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் விமான பயணத்தை அதிகரிக்கும் நோக்கில் விமான நிறுவனங்கள் பல சலுகைகளையும் அவ்வபோது அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது இண்டிகோ நிறுவனம், கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் தங்கள் விமானத்தில் பயணித்தால் அவர்களுக்கு டிக்கெட் விலையில் 10% தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் தடுப்பூசி போடுவது அதிகரிப்பதுடன், பயணிகள் வரத்தும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்