இந்தியாவில் 73% சொத்துக்களை ஆளும் 1% கோடீஸ்வர்கள்: அதிர வைத்த ரிபோர்ட்....

Webdunia
திங்கள், 22 ஜனவரி 2018 (15:18 IST)
இந்தியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த சொத்துக்களில் 73 சதவீதத்தை, ஒரு சதவீத கோடீஸ்வரர்கள் ஆண்டு வருவதாக ஆய்வின் ரீபோர்ட் ஒன்று தெரிவிக்கிறது. 
 
உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பொருளாதார நடவடிக்கைகள், இதனால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் பின்வருமாறு உள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் உருவான சொத்து மதிப்பில் 82 சதவீதம் அளவு வெறும் ஒரு சதவீதம் பேரிடம் உள்ளது. 
 
குறிப்பாக இந்தியாவின் மொத்த சொத்துக்களில் 73 சதவீதம், ஒரு சதவீத மக்கள் கையில் உள்ளது. அவர்களின் சொத்து மதிப்பு 20.9 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இது, மத்திய அரசின் 2017-18 பட்ஜெட்டிற்கு நிகரான தொகை. 
 
இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் பொருளாதார திட்டங்கள், ஏற்கெனவே சொத்து வைத்துள்ளவர்கள் புதிய தொழில்களை தொடங்கி அதில் அதிக வருவாய் ஈட்டும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கையும் 58 சதவீதமாக அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்