வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்: மும்பை மக்களுக்கு திடீர் எச்சரிக்கை

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (08:11 IST)
வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்: மும்பை மக்களுக்கு திடீர் எச்சரிக்கை
இன்றும் நாளையும் மும்பை மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் கன மழை பெய்து வரும் நிலையில் மும்பையில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து இன்றும் நாளையும் மும்பை வாசிகள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
 
இந்த மழை ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும் என்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகத்தான் இன்றும் நாளையும் கனமழை மும்பையில் பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
மேலும் வங்கக்கடலில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மும்பை மட்டுமின்றி மத்திய பிரதேச மாநிலத்திற்கு நல்ல மழையை கொடுக்கும் என்றும் அரியானா, டெல்லி, பஞ்சாப்போன்ற மாநிலங்களில் இருந்து ஓரளவுக்கு நல்ல மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இன்றும் நாளையும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மும்பை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்