இதனால் வாடிக்கையாளர்கள், வங்கியின் இணைய சேவைகளை பயன்படுத்தும்போது சில சிக்கல்களை எதிர்கொள்வதாக புகார் வந்தது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி இதுகுறித்து அறிவுறுத்தியும் கோடக் மஹிந்திரா வங்கி இதுதொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணத்தால், ஆன்லைன் வாயிலாக, புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பது, புதிய கிரெடிட் கார்டுகள் வழங்குவது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு, வங்கி தொடர்ந்து அதன் சேவைகளை வழங்கலாம் என்று அறிவித்துள்ளது.