ஒரு மணி நேரத்தில் பல்வேறு நபர்களிடம் இருந்து 24 முறை ஃபோன் செய்து மிரட்டப்பட்டதாகவும் நான் அவர்களிடம் கடனை வாங்கவில்லை எனவே பணத்தை செலுத்த முடியாது என்று கூறியதாகவும் உடனே மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்களை எனது நண்பர்கள் மற்றும் உறவினருக்கு அனுப்பி என்னை சித்திரவதை செய்ததாகவும் அந்த பெண்கள் போலீசில் புகார் அளித்துள்ளார்
இதனை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. இதே போன்று நாட்டின் பல பகுதிகளில் ஆன்லைனில் கடன் கொடுக்கும் நிறுவனங்கள் இளம் பெண்களை மிரட்டி பணத்தை கறந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.