பெரும்பான்மை இருந்தும் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் காங்கிரஸ் தோல்வி.. கட்சி மாறி ஓட்டு போட்டார்களா?

Siva

புதன், 28 பிப்ரவரி 2024 (07:40 IST)
நேற்று மாநிலங்களவை  தேர்தல் நடந்த நிலையில் பெரும்பான்மை இருந்தும் இமாச்சல பிரதேச மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தலில் பாஜகவிடம் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
மாநிலங்களவை  தேர்தலை பொறுத்தவரை எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மட்டுமே வாக்கு செலுத்துவார்கள் என்பதால் பெரும்பாலும் அவரவர் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்கு செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மிக அரிதாக மட்டுமே மாற்றுக் கட்சி வேட்பாளருக்கு வாக்குகள் விழும் என்ற நிலையில் நேற்று நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் பாஜகவிடம் காங்கிரஸ் தோல்வி அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்றைய தேர்தலில் ஆறு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்கு செலுத்தியதாகவும் அதனால் பெருன்பான்மை இருந்தும் ஒரு காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தை சரிசெய்ய கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவக்குமாரை காங்கிரஸ் தலைமை அனுப்பி இருப்பதாகவும் கட்சி மாறி ஓட்டு போட்டவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்