அசோக் கெலாட்டுக்கு காங். முழு ஆதரவு; புது கட்சி துவங்கும் சச்சின் பைலட்??

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (17:19 IST)
காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டத்தில் அசோக் கெலாட் தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. சச்சின் பைலட் தனக்கு ஆதரவாகவே அதிக எம்.எல்.ஏக்கள்  உள்ளதாக கூறி வருகிறார். இந்த சிக்கலை பயன்படுத்தி சச்சின் பைலட்டை பாஜகவின் பக்கம் ஈர்க்கவும் திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது. 
 
இந்நிலையில், இன்று நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அசோக் கெலாட் அரசுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கர்நாடகா, மத்திய பிரதேசத்தில் நடந்தது போன்று ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்துவிட கூடாது என்பதில் கட்சி தலைமை தீவிரமாக உள்ளது. இதனால் சச்சின் பைலட்டை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியது. 
 
ஆனால் இஅவை எதுவும் கைக்கொடுக்கவில்லை என தெரிகிறது. எனவே, முதலமைச்சர் அசோக் கெஹ்லோட்டின் இல்லத்தில் நடந்த காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டத்தில் அசோக் கெலாட் தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், எம்.எல்.ஏ.க்கள் ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டல் ஃபேர்மாண்டிற்கு சென்றுள்ளனர். மேலும், முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சச்சின் பைலட், பாஜக-வில் இணையப் போவதில்லை என்றும் புதிய கட்சி தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்