இந்தியாவை பாதிக்கும் பாஜக பொருளாதார பெருந்தொற்று! – ராகுல்காந்தி விமர்சனம்!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (15:35 IST)
இந்தியாவில் கொரோனா போல பாஜகவின் பொருளாதார பெருந்தொற்றும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் கோவா, பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்டவற்றில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளன. இந்நிலையில் காங்கிரஸும் பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாஜக அரசு குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி காரசாரமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். சமீபத்தில் ட்விட்டரில் பதிவிட்ட அவர் “நாடு முழுவதும் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரும் மோடி அரசாங்கத்தின் ‘பொருளாதார தொற்றுநோயால்’ பாதிக்கப்பட்டுள்ளனர். பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளியை தோண்டி எடுத்த பெருமை மத்திய அரசையே சாரும்” என்று தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சியனரிடையே ஏற்படும் விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்