பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிட்ட 41 இடங்களில் 30 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தனது கட்சி வெற்றி பெற்றிருப்பதற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்ததுடன் காஷ்மீர் என்றாவது ஒருநாள், பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறும் என்று நவாஸ் ஷெரீப் கூறியிருந்தார்.