பிரதமர் முன்பு காலின் மேல் காலிட்டு அமர்ந்த பிரியங்கா சோப்ரா...

Webdunia
புதன், 31 மே 2017 (13:23 IST)
ஜெர்மனுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடி, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தொடர்ந்து வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் மோடி, சமீபத்தில் ஜெர்மனுக்கு சென்ற போது, அங்கு பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுடன் சிறிது நேரம் உரையாடினார். இந்த புகைப்படத்தை பிரியங்கா தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
 
அதில் அவர் மோடியின் முன்பு காலின் மேல் காலிட்டு அமர்ந்துள்ளார். இதை சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர். மேலும், தமிழக விவசாயிகள் அத்தனை நாட்கள் டெல்லியில் போராட்டம் நடத்திய போது, அவர்கள் சந்திக்க மறுத்த மோடி, ஒரு நடிகையை சந்திக்க மட்டும் நேரம் ஒதுக்கிறாரே என சமூகவலைத்தளங்களில் பலரும் கொந்தளிப்போடு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்