அயோத்தி வழக்கு: நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்!

Webdunia
சனி, 9 நவம்பர் 2019 (08:40 IST)
அயோத்தி தீர்ப்பு இன்று வெளியாக இருக்கும் நிலையில் மக்களுக்கு இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருக்கும் நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அயோத்தி சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் பதட்டநிலை உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அயோத்தி வழக்கு குறித்து தனது ட்விட்டரில் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி “உச்ச நீதிமன்றம் வழங்க இருக்கும் முடிவு யாருக்கும் வெற்றியையோ அல்லது தோல்வியையோ தருவது அல்ல. என்னுடைய வேண்டுகோள் எந்த தீர்ப்பானாலும் அதை ஏற்றுக்கொண்டு மக்கள் இந்தியாவின் அடையாளமான அமைதியையும், சமத்துவத்தையும் பேண வேண்டும் என்பதுதான்!” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்