ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த மோடி! அதிர்ந்த உலக நாடுகள்!

Webdunia
திங்கள், 4 நவம்பர் 2019 (21:18 IST)
தாய்லாந்தில் நடைபெற்ற ஆர்.சி.இ.பி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அவர்களுடைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.சி.இ.பி எனப்படும் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாடு தாய்லாந்தில் இன்று நடைபெற்றது. தென்கொரியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் ஆர்.சி.இ.பி கூட்டமைப்பில் இணையும் 16 நாடுகளுக்கிடையேயான வணிக உறவுகள் மற்றும் வெளியுறவு வணிக கொள்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டன.

இறுதியாக பேசிய பிரதமர் மோடி ”ஆர்.சி.இ.பியின் புதிய ஒப்பந்தங்கள் அதன் நோக்கத்துக்கு மாறாக உள்ளன. இதுகுறித்து முடிவெடுக்க இந்தியாவி சேர்ந்த ஒவ்வொரு விவசாயிக்கும், தொழில் அதிபருக்கும், வர்த்தகர்களுக்கும் உரிமை உள்ளது. அவர்களது அளவீட்டில் இருந்து பார்க்கும்போது எனக்கு நேர்மறையான பதில் கிடைக்கவில்லை. காந்தியின் வழிநடத்தலோ அல்லது மனசாட்சியோ ஏதோ ஒன்று என்னை தடுக்கிறது” என கூறியுள்ளார்.

உலக நாடுகளே இந்தியாவை மிகப்பெரும் இடத்தில் வைத்து பார்த்திருக்க பிரதமர் மோடி இப்படி பேசியது மற்ற நாட்டு தலைவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. எனினும் இந்திய மக்களுக்கு உதவாத வகையில் அந்த திட்டங்கள் இருந்ததால் மோடி அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்