குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு: சென்னையில் 100% வாக்குப்பதிவு!

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (17:43 IST)
புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய இன்று நாடு முழுவதும் தேர்தல் நடைபெற்ற நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த தேர்தலில் 100 சதவீத வாக்குபதிவு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
குடியரசு தலைவர் தேர்தலுக்கு எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் வாக்களிப்பார்கள் என்ற நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று வாக்களித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
பாஜக கூட்டணியின் சார்பில் திரெளபதி முர்மு மற்றும் எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்