முதல்வர் பதவியேற்பு விழா - கருணாநிதி கலந்து கொள்வாரா?

Webdunia
ஞாயிறு, 5 ஜூன் 2016 (08:50 IST)
புதுவை மாநில முதல்வர் பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
 

 
புதுவை மாநில முதலமைச்சர் ஆக பதவியேற்க, முன்னாள் மத்திய அமைச்சர் நாரயணசாமி பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு கருணாநிதிக்கு, நாராயணசாமி நேரில் அழைப்பு விடுத்தார்.
 
இதனையடுத்து, புதுவை மாநில முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் கருணாநிதி அல்லது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரில் ஒருவர் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
 
 
அடுத்த கட்டுரையில்