குண்டு காவலர் என ட்வீட் செய்த எழுத்தாளர்; மனம் வருந்திய போலீஸ்

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2017 (19:04 IST)
மும்பையைச் சேர்ந்த குண்டான காவலர் ஒருவர் புகைப்படத்தை எழுத்தார் ஷோபா டே தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார். இதற்கு அந்த காவல் ஆய்வாளர், கிண்டலாக எனது புகைப்படத்தினை டே டுவிட்டரில் பதிவிட்டது எனக்கு மனவருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது, என்று கூறியுள்ளார்.


 

 
மும்பையில் நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்றது. அதைத்தொடர்ந்து மாலை எழுத்தாளர் ஷோபா டே, தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். குண்டு காவலர் புகைப்படத்தை வெளியிட்டு குண்டான காவலர் என ட்வீட் செய்திருந்தார்.
 
இதற்கு நேற்று முதல் பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஷோபா டே வெளியிட்ட புகைப்படத்தில் உள்ளவர் மத்திய பிரதேச மாநில காவல் ஆய்வாளர் தவுலத்ராம் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
கிண்டலாக எனது புகைப்படத்தினை டே டுவிட்டரில் பதிவிட்டது எனக்கு மனவருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த 1993 ஆம் ஆண்டு நடந்த அறுவை சிகிச்சையால் ஹார்மோன் சீரற்ற நிலையினால் எனது உடல் பருமன் அதிகரித்துள்ளது என கூறியுள்ளார்.
 
மேலும் தனது உடல் எடை குறைப்பது பற்றி பதிலளிக்க வேண்டியது எனது மூத்த அதிகாரிகளிடமே என்றும் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்